செய்யாறு
'திருவோத்தூர் சிவன் கோவில்' ஒரே மன்னரால், கட்டப்படாமல் பல மன்னர்களால்
கட்டப்பட்டது. 5 ஆம் நூற்றாண்டில் 'சிம்மவர்ம பல்லவரால்' கட்டத் தொடங்கி,
பின் 'பராந்தக சோழன், இராசராச சோழன், விக்கிரம சோழன், சம்புவராயர் மற்றும்
திருமலை நாயக்கர்', இறுதியாக 'கிருஷ்ண தேவராயர்' காலத்தில் 1500 ஆம்
ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதுபோல், பல மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்
வேறு எதுவுமில்லை. இக்கோவிலில் ஏழு கரத்துடன் நர்த்தன விநாயகர் இருப்பது
மிகச் சிறப்பான ஒன்று. பெரும்பாலான சிவன் கோவில்களில் நந்தியானது இறைவனைப்
பார்த்துத்தான் இருக்கும், ஆனால், இக்கோவிலில் நந்தி, வாசலைப் பார்த்து
அமர்ந்திருக்கும். பகைவர்கள் உள்ளே நுழையாமல் நந்தி பாதுகாப்பதாக ஐதீகம்.



