Pages

சனி தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்






1.ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து நல்லெண்ணை ஊற்றி இரண்டு அகல் விளக்குகளை சனிபகவான் சன்னதியில் ஏற்றி வைத்து, எள்சாதம் படைத்து சனீஸ்வரனை மனமுருகி வழிபட வேண்டும். சனி கவசம் கூறலாம். சனிபகவான் ஸ்தோத்திரப் பிரியர்.

2.சனிபகவான் ஸ்தோத்திரப் பிரியர் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அர்ச்சனை (அஷ்டோததிரம்) செய்யலாம்.

3.திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள், சனீஸ்வரன் ஆகியோரை வழிபட வேண்டும். அங்கு கருப்பு வஸ்திரதானம் எட்டு ஏழைகளுக்குச் செய்யலாம்.

4.கறந்த பசுவின் பாலை சனிக்கிழமை தோறும் சிவ பெருமான் திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் சனிபகவான் மனம் குளிரும்.

5.ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவனை வில்வத்தால் அர்ச்சனை செய்து, சிவனுக்கு விளக்கேற்ற வேண்டும்.

6.பிரதோஷ வழிபாடும் மிகச் சிறந்தது.

7.நீலக்கல் பதித்த மோதிரத்தை இந்த ஏழரை ஆண்டுக்காலம் வலது கை மோதிரவிரலில் அணிந்து கொள்ளலாம்.

8.ஆஞ்சநேய வழிபாடு ஏழரை நாட்டுச் சனியின் கொடூரத்தைக் குறைக்கும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கலாம். வடைமாலை சாற்றலாம். ஆஞ்சநேயரை 27 முறை வலம் வந்து வழிபடுதல் நல்லது.

9.எள் கலந்த சாதத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்து ஏழைகளுக்கு தட்சிணையோடு கொடுக்க வேண்டும்.

10.விநாயக வழிபாடும் சனீஸ்வர பகவானின் கொடூரத்தைக் குறைக்கும் விநாயகரும் ஆஞ்சநேயரும் மட்டுமே சனியின் வீச்சில் ஆட்படாதவர்கள்.

11.ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலையிலும், இரவிலும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.

12.காக்கைக்கு தினமும் அன்னமிடலாம்.

13.காலையிலும், மாலையிலும் கோயிலுக்குச் சென்று ஒன்பது முறை நவக்கிரகங்களை வலம் வந்து வணங்கி வழிபட வேண்டும்.

14.தோல் அகற்றாத கருப்பு உளுந்து தானம் செய்ய லாம்.

15.தினமும் அதிகாலையிலும், மாலையிலும் சனீஸ்வரவர் தோத்திரத்தை மட்டும் பாராயணம் செய்ய வேண்டும்.

16. சிவபுராணம் படித்தல், பஞ்சாட்சரத்தை ஜெபித்தல், சுதர்சன மூலமந்திரம் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் ஆகியவற்றைப் படித்தால் இன்னல்கள் குறையும்.

17.சனியினால் இன்னல்கள் அதிகமாகும் பொழுது கறுப்பு முழு உளுந்தை வாங்கி 108 எண்ணிக்கை எடுத்து பொட்டலம்கட்டி இரவு படுக்கையில் தலைக்கருகில் வைத்துக் கொண்டு காலையில் எழுந்து குளித்துவிட்டு சனிபகவானை 108 முறை வலம் வர வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு முழு உளுந்தை தரையில் ஓரிடத்தில் போட வேண்டும். இதனால் கறுப்பு உளுந்தை சனிபகவான் சன்னதியில் தானம் செய்வது, ஜீவராசிகளுக்கு இரையிடுவது இரண்டு பலன்களும் கிடைக்கும்.

18.சிவபெருமானை வழிபடும் தாரித்தரிய தகனஸ் தோத்திரத்தை சிவன் கோவிலில் சிவபெருமான் முன்பாக அல்லது தட்சிணாமூர்த்தி முன்பாக வாசித்தாலும் சனிபகவானால் ஏற்படும் இன்னல்கள் குறையும்.

19.சனிபகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்க தசரதர் அருளிய `புத்திர ப்ராப்தி ஸ்தோத்திரம்' பாராயணம் செய்யலாம்.