திருமங்கையாழ்வார்
இந்தத் தலத்தில் உத்தமன் புருஷோத்தமனை ஸ்ரீரங்கநாதனாகவே பாவித்து
வணங்கியிருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகி றது. ஏனென்றால், இங்கே
தங்கியிருந்துதான், திருவரங்கத்தில் மிகச் சிறந்த மதில் திருப்பணியை அவர்
மேற்கொண்டார். அந்தப் பணியின் தினசரி வளர்ச்சியைக் கண்டு, கோயில் மேம்பட
உரிய யோசனையையும் உதவியையும் அவர் அளித்தார். மதில் திருப்பணி
முற்றுப்பெறும்வரை அவர் இந்தத் திருக்கரம்பனூரிலேயே தங்கியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது. கதம்ப புஷ்கரிணியின் வடக்கே உள்ள தோப்பும்
நன்செய் நிலமும் எழில்மிகுந்த சோலையும் இன்றும் ‘ஆழ்வார் பட்டவர்த்தி’
என்றழைக்கப்படுகிறது - இப்பகுதியில் தங்கியிருந்த திருமங்கையாழ்வாரை
நினைவுகொள்ளும் வகையாக.
கரம்பனூர் உத்தமன் என்ற சொற்றொடரை, ‘வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவு இடாதே கிடக்கிறவன்’ என்று பெரியவாச்சான் பிள்ளை விளக் கம் தருகிறார். அதாவது அவர் காலத்தில் இந்த உத்தமர் கோயிலுக்குக் கதவே இல்லாமலிருந்தது. பயணிகள் போய்த் திரும்பும் வழியாக இருப்ப தால், அவர்கள் அனைவரும் கதவு என்ற தடையை சந்திக்காமல், தன்னை வந்து தரிசிக்குமாறு உத்தமனே தன் கோயிலுக்குக் கதவு இல்லாமல் இ ருந்திட செய்துவிட்டானாம்! திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தங்கி தன் கோயிலின் திருப்பணியை மேற்கொண்டதைச் சிறப்பிக்கும் வகையில் ரங்கநா தர், ஆண்டுக்கு ஒருமுறை கதம்பனூருக்கு எழுந்தருளி, கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தவாரி காண்கிறார்!
இந்தக் கோயில், பிட்சாண்டார் கோயில் என்று சிவனை முன்னிலைப்படுத்தியும் அழைக்கப்படுகிறது. கோயிலினுள் நுழைந்தால் இடது பக்கம் பூர்ணவல்லித் தாயார் முதல் தரிசனம் தருகிறார். சிவபெருமானுக்குக் கைக் கபாலம் நிறைய உணவிட்ட இந்த அன்னை இந்தக் கோயிலுக்குள் வரும் எல்லா பக்தர்களுக்கும் வாழ்வில் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் போகச் செய்து அருள்கிறாள். அன்ன மிடும் அந்த அன்னையின் முகம் தாய்மை பொங்க ஒளிவிடுகிறது. வடக்கே காசியில் ஓர் அன்னபூரணி என்றால், தெற்கே இந்த பூர்ணவல்லித் தாயார். அடுத்து மிகச் சிறு சந்நதியில் சிவகுரு தட்சிணாமூர்த்தி கொலுவிருக்கிறார். இவருக்கு அருகில் பிட்சாண்டவர். அருகில் இரட்டை விநாயகர், பாலலிங் கம், லட்சுமி நாராயணர், ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் சந்நதிகள்.
சற்றுத் தள்ளி சௌந்தர்ய பார்வதி அம்மன் நந்தவனம், பசுமை போர்த்திக் கொண்டிருக்கிறது. அடுத்து பிரதான மூலஸ்தானத்தில் பிட்சாண்டவரை தரிசிக்கலாம். அடுத்தடுத்து உற்சவ மூர்த்திகள், நால்வர், மஹா கணபதி, சிவ லிங்கம், முருகன், வேணுகோபாலன், நவகிரகம், தசரத லிங்கம், பிரம்மன், ஞான சரஸ்வதி என்று தெய்வங்கள் பேரருள் புரிகின்றன. இந்த சந்நதிப் பட்டியலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, சைவமும் வைணவமும் அடுத்தடுத்து தம் ஒற்றுமையைப் பறைசாற்றுவதைத் தான். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டத்தான் சந்நதியிலோ, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீகள்வன் சந்நதியிலோ பார்க்க முடியாத வைணவப் பெருமக்களை இந்தக் கோயிலில் காண முடிகிறது.
பொதுவாகவே திருச்சி மாவட்டத்திலுள்ள திவ்ய தேசத் திருத்தலங்கள் ஆறிலுமே சைவ அம்சம் காணப்படுவது அந்த பெருமாளின் உள்ளக் கிடக்கை என்றே கருதத் தோன்றுகிறது. கோயிலின் தலவிருட்சம், கதலி வாழை மரம். பலவகை மரங்கள் கொண்ட கதம்ப வனத்தில் இந்த கதலி வாழை மரமும் ஒன்று. பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்படும் எளிய நிவேதனப் பொருளாகக் கதலி வாழைப்பழம் உதவியதால், இந்த மரத்தினையே தன் தல விருட்சமாக புருஷோத்தமன் அங்கீகரித்திருக்கிறார் போலிருக்கிறது! நிறைவாக புருஷோத்தமன் சந்நதியை அடைகிறோம். புஜங்க சயனனாக, ஏகாந்தமாக பள்ளிக் கொண்டிருக்கிறார் பரந்தாமன். குறுநகை நம் கர்வத்தை எள்ளி நகையாடுகிறது. ‘இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’
என்று பட்டினத்தார் பாடிய தற்கேற்ப, ‘குழப்பங்களும் அமைதியின்மையும் கொண்டு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஏங்கி அலையும் ஆன்மாக்களே, என்னை நாடி என் அருளால் எல்லா வளமும் பெறுங்கள்’ என்று ஆறுதலளிக்கிறது அந்தக் குறுநகை. ஜனகர் குழப்பத்தையே தீர்த்து வைத்தவரல்லவா! சந்நதியில் வழங்கப்படும் தீர்த்தமும், துளசியும், சடாரி ஆசிர்வாதமும் மன அழுக்கையெல்லாம் உருக்கி வெளியேற்ற, நல்நம்பிக்கையுடன் நிமிர்ந்த உள்ளத்தால் புதுத் தெம்பு பெறமுடிகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.
இந்த உத்தமர் கோயிலை குருமஹா சந்நிதானம் என்றே அழைக்கலாம். அந்த வகையில் அநேக குருமார்கள் இங்கே நமக்காக தரிசனம் நல்கக் காத்திருக்கிறார்கள். யார் அந்த குருமார்கள்? இறைப் பேரருளாளர்களே, அவர்கள்: பிரம்ம குரு, விஷ்ணு குரு (வரதராஜப் பெருமாள்), சிவ குரு (தட் சிணாமூர்த்தி), சக்தி குரு (சௌந்தர்ய பார்வதி), ஞான குரு (சுப்ரமண்யர்), தேவ குரு (பிரஹஸ்பதி), அசுர குரு (சுக்கிராச்சார்யார்)! ஸ்ரீரங்கம் போல பிரமாண்டமானதாக, விஸ்தாரமானதாக இல்லாவிட்டாலும், அநேக கடவுளர்களின் வடிவங்கள் நம்மை நின்று நிதானித்து வழிபட்டுச் செல்ல வைக்கின்றன. மூலவர் உத்தமர், தன் பெயருக்கேற்றார்போல சைவத்தையும் அரவணைத்துச் செல்லும் அற்புதக் கடவுளாகவே திகழ்கிறார்.