Pages

ஆகஸ்ட் மாத விசேஷங்கள் : 10.8.2012 ஆடிக்கிருத்திகை


இது தட்சிணாயனத்தில் வரும் முதல் கிருத்திகையாகப் போற்றப்படுகிறது. ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் விழ அதை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்து ஆறுமுகமாக்கினர். இன்று முருகப்பெருமான் திருவருள் புரியும் தலங்களில் எல்லாம் விசேஷ வழிபாடுகள் நடக்கும். பக்தர்கள் விதவிதமான காவடிகள் எடுத்தும், முடி இறக்கியும் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவர்.