Pages

ஆகஸ்ட் மாத விசேஷங்கள் : 9.8.2012 கோகுலாஷ்டமி



தேவகி-வசுதேவரின் எட்டாவது குழந்தையாக சிறையில் வந்துதித்தான் கண்ணன். அப்போது பெருங்காற்று, இடி, மின்னலோடு மழை பெய்தது. வசுதேவரிடம் தன்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபர் இல்லத்தில் சேர்க்கும்படி கண்ணன் கூற, அதன்படி சிறைக் கதவுகள் தானே திறக்க, ஆதிசேஷன் குடைபிடிக்க, யமுனையைக் கடந்தபோது அந்த நதியின் பாவங்களை தன் திருவடிகளின் ஸ்பரிசத்தால் கண்ணன் நீக்கியருளிய புனித நாள் இது. இன்று அரிசிமாவினால் வாசலிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் பொற்பாதங்களை வரைவர். வெண்ணெய், பால், தயிர், முறுக்கு, சீடை, கடலை உருண்டை, வித விதமான இனிப்புகள், அவல் போன்றவற்றை நிவேதிப்பர். கண்ணன் பிறந்ததால் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் பேறு பெற்றன. இன்று கண்ணனை உளமாறத் தொழுது, வேண்டும் வரங்கள் பெறுவோம்.