Pages

ஆகஸ்ட் மாத விசேஷங்கள் : 29.8.2012 ஓணம் பண்டிகை



மகாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்திற்கு குள்ளமான உருவத்துடன் திருமால் பிரம்மச்சாரி வடிவில் வந்தார். சக்ரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு யாசித்தார். மன்னனும் அவ்வாறே நீர்வார்த்து அனுமதிக்க, முதல் அடியால் விண்ணையும் இரண்டாம் அடியால் மண்ணையும் அளந்து, ‘‘மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?’’ என்று கேட்க, மகாபலிச் சக்ரவர்த்தி தன் தலையை திருமாலுக்கு அர்ப்பணித்தார். அவன் தலை மீது தன் திருவடியை வைத்து அவனை பூமிக்குள் அமிழ்த்தினார், திருமால். ஓணம் பண்டிகை தினமான இந்நாள், மகாபலிச் சக்ரவர்த்தி பூமிக்கு வரும் நாளாக கொண்டாடப்படுகின்றது. இன்று கேரள மக்கள் வகை வகையான பூக்களால் கோலங்கள் வரைந்து ஓணம் சத்யா எனும் பெயரில் விருந்துண்பர். அந்த விருந்தில் பலாப்பழ பாயசமும், பப்படமும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.