Pages

செப்டம்பர் மாத விசேஷங்கள் : ரிஷிபஞ்சமி 20.9.2012|


 

அருந்ததி சமேத வசிஷ்டமுனி, காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்னி, கௌதமர் ஆகிய ஏழு ரிஷிகளையும் போற்றி, பூஜிக்கும் புண்ணிய விரதமே ரிஷிபஞ்சமி விரதம் எனப்படுகிறது. முக்கியமாக மாதவிலக்கு நின்று ஏழு ஆண்டுகள் ஆன பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம். முதலில் யமுனை நதியை மானசீகமாக பூஜித்து விட்டு (யமுனை நதியருகே வசிப்பவர்கள் நேரடியாக இந்த ஆற்றுக்கே சென்று, அதில் நீராடி, அதையே வழிபட்டு) இந்த விரதத்தை ஆரம்பிப்பார்கள். அஷ்டதள தாமரை கோலமிட்டு அதன் மீது கும்பத்தை வைத்து இந்த பூஜையை செய்வார்கள். இதனால் கொடிய பாவங்கள் நீங்கி, தேவ ரிஷிகளின் ஆசி கிட்டி, சந்ததியினர் நலம் பெருகும். ரிஷி பஞ்சமி பூஜை மேற்கொண்டிருந்த பெண்மணிகளைக் கேலி செய்ததால் விதர்ப்ப நாட்டினைச் சேர்ந்த உதங்கமகரிஷி-சுசீலை தம்பதியின் மகள் உடல் நலம் கெட்டது. அதற்குப் பிராயச்சித்தமாக அதே ரிஷிபஞ்சமி விரதம் இருந்து அவள் நலம் பெற்றாள். இந்த விரதம் கடைப்பிடிப்பவர்கள் 16 செல்வங்களையும் அடையலாம் என்பது பலரது அனுபவம்.