மலையாள
பக்தர்கள் ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி நாளாகக் கொண்டாடுகின்றனர்.
மகாபலிச் சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்க திருமால் அதிதி-கஸ்யபர்
தம்பதியருக்கு மகனாக, குள்ள வடிவில் வாமனனாக அவதரித்தருளிய பொன்நாள் இது.
குள்ள வடிவில் மகாபலியிடம் மூன்றடி நிலம் தானமாகக் கேட்டு பின் விஸ்வரூபம்
எடுத்து, ஓரடியால் விண்ணையும் மறு அடியால் மண்ணையும் அளந்து மூன்றாவது
அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு மகாபலியின் தலையில் காலை வைத்து அவரை
பாதாளத்தில் அமிழ்த்தினார் திருமால். இந்த புண்ணிய கதையை இன்று படிப்பதால்
பாவங்கள் தீரும் என விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று
திருமாலை தரிசித்தால் அவரது திருவருள் கிட்டும்.



