கச்யபர்-வினதையின் மகன் கருடன். பெரிய திருவடி என திருமால் அடியார்களால் போற்றப்படுபவன். இன்று கருடன் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்து வந்த தினம். கருடன் வேதங்களே வடிவானவர். சூரியனின் தேரோட்டியான அருணன், கருடனின் சகோதரன். ருத்ரா, சுகீர்த்தி இருவரும் கருடனின் மனைவியர். ராம-ராவண யுத்தத்தில் இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடந்த ராம-லட்சுமணர், ஆகாயத்தில் சஞ்சரித்த கருடனின் இறக்கைக்காற்றால் விழித்தெழுந்தனர். ஆறு மாதங்கள் கருட தியானத்தை விடாமல் உபாசிப்பவருக்கு தன் சக்தியில் ஒரு துளியை கருட பகவான் அருள்கிறார். கருட பக்தனின் பார்வை பட்டால் விஷ ஜுரம் குணமாகிவிடும். கருட பஞ்சமியன்று இதைப் படித்தால் அமிர்தம் போல வாழ்வும் தீர்க்காயுளும் கிட்டும்.
ஜூலை மாத விசேஷங்கள் : 23.7.2012 கருட பஞ்சமி