
செப்டம்பர் 29, சனி
திருவாரூர், திருநள்ளார், திருமறைக்காடு, திருநாகை, வேதாரண்யம் ஆகிய தலங்களில் நிறைபணி உற்சவம். கரூர் தான் தோன்றி கல்யாணவேங்கடேசப் பெருமாள் பவனி. பௌர்ணமி.
செப்டம்பர் 30, ஞாயிறு
மதுரை கூடலழகர் சந்நதியில் பாற்குடக்காட்சி. இரவு ஐந்து கருட சேவை.
அக்டோபர் 1, திங்கள்
திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. மகாள யபட்சம் ஆரம்பம்.
அக்டோபர் 2, செவ்வாய்
சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
அக்டோபர் 3, புதன்
திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். திருப்போரூர் முருகர் அபிஷேகம். சங்கடஹர சதுர்த்தி.
அக்டோபர் 4, வியாழன்
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம், வைரவேல் தரிசனம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. கார்த்திகை விரதம்.
அக்டோபர் 5, வெள்ளி
ராமேஸ்வரம் பர்வதவர்த்தியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. வள்ளலார் அவதார தினம்.


