Pages

ஆகஸ்ட் மாத விசேஷங்கள் : 2.8.2012 ஆடிப்பெருக்கு


 

ஆடி மாதம் பதினெட்டாம் தேதி, ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகள் வற்றாமல் இருக்க வருண பகவானையும் தேவதைகளையும் வணங்கும் நாள் இது. கிராமப்புறங்களில் வகை வகையான கலந்த சாதங்களை தயார் செய்து கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அதன் கரையில் பூஜைகள் செய்து, கலந்த சாதங்களை நிவேதனம் செய்து, சொந்த பந்தங்களோடு உண்பது வழக்கம். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரைக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்வர். காவிரிக் கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.