Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?


 

செப்டம்பர் 1, சனி

திருநள்ளார் சனி பகவான் சிறப்பு ஆராதனை.

செப்டம்பர் 2, ஞாயிறு

கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் அனுமனுக்குத் திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 3, திங்கள்

சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பாவாடை தரிசனம். கீழ்த் திருப்பதி கோவிந்தராஜர் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 4, செவ்வாய்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சங்கட ஹர சதுர்த்தி.

செப்டம்பர் 5, புதன்

திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

செப்டம்பர் 6, வியாழன்

திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும் இரவு பல்லக்கிலும் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

செப்டம்பர் 7, வெள்ளி

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் புறப்பாடு. கார்த்திகை விரதம்.