அக்டோபர் 6, சனி
ஸ்ரீவில்லி புத்தூர் அருகிலுள்ள திருவண்ணாமலையில் அருளும் ஸ்ரீநிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் பவனி. திருநள்ளார் சனி பகவான் சிறப்பு ஆராதனை.
அக்டோபர் 7, ஞாயிறு
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
அக்டோபர் 8, திங்கள்
பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் விஷு உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சந்நதியில் கரு டாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
அக்டோபர் 9, செவ்வாய்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருக்குற்றாலம், பாபநாசம் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.
அக்டோபர் 10, புதன்
திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவம்பல், திருக்குற்றாலம், பாபநாசம் ஆகியத் தலங்களில் சிவபெருமான் பவனி.
அக்டோபர் 11, வியாழன்
திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார் கண்ணாடி மாளி கைக்கு எழுந்தருளல். சர்வ ஏகாதசி.
அக்டோபர் 12, வெள்ளி
திருக்குற்றாலம் சிவபெருமான் பவனி. திருவிடைமருதூர் பிரஹத் குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனி கள் திருவீதிஉலா.



