பொதுவாக
முருகன் ஆலயங்களில் முருகன் சன்னதிக்கு முன்னால் மயில் வாகனம்
அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், சிவகங்கை மாவட்டம் ' பிரான் மலை'யிலுள்ள
'முருகப் பெருமான் ஆலய'த்தில் முருகப் பெருமானுக்கு முன்னால் மயில் வாகனம்
அமைக்கப்படவில்லை, யானை வாகனம் அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்று முருகனின்
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில், மலைமேலே உள்ள சுவாமிநாத சுவாமி
சன்னதிக்கு நேரே யானை வாகனம் தான் உள்ளது.



