Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?



செப்டம்பர் 8, சனி

ஸ்ரீபஞ்சராத்திர ஜெயந்தி. திருச்செந்தூர் முருகன், காலையில் தங்க முத்துகிடா வாகனத்தில் பவனி. தேவமாதா பிறந்த தினம். இமயஜோதி சுவாமி சிவானந்தர் அவதார தினம்.

செப்டம்பர் 9, ஞாயிறு

மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி உறியடி உற்சவம். திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

செப்டம்பர் 10, திங்கள்

பிள்ளையார்பட்டி விநாயகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் முருகன் கோரதத்தில் பவனி. இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் வெள்ளி இந்திர வாகனத்திலும் பவனி.

செப்டம்பர் 11, செவ்வாய்

திருச்செந்தூர் முருகப்பெருமான் உருகுச் சட்ட சேவை. பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் பவனி.

செப்டம்பர் 12, புதன்

மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலமாய் மாலை வெண்ணைத் தாழி சேவை. திருச்செந்தூர் முருகன் பவனி. சர்வ ஏகாதசி.

செப்டம்பர் 13, வியாழன்

உப்பூர் விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதியுலா. மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ராமாவதாரம். மாலை தவழ்ந்த கண் ணன், யானை வாகனத்தில் பவனி. பிரதோஷம்.

செப்டம்பர் 14, வெள்ளி

திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் புறப்பாடு. மாத சிவராத்திரி.