Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?


 


அக்டோபர் 27, சனி

சனிப்பிரதோஷம். திருநள்ளார் சனிபகவான் சிறப்பு ஆராதனை.

அக்டோபர் 28, ஞாயிறு

கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் அனுமனுக்குத் திருமஞ்சன சேவை. திருவரங்கம் நம்பெருமான் புறப்பாடு.

அக்டோபர் 29, திங்கள்

பௌர்ணமி. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் சுவாமி வைகுண்டபதி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பாவாடை தரிசனம். சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா.

அக்டோபர் 30, செவ்வாய்

திருநெல்வேலி காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம். சங்கரநாயினார்கோவில், தென்காசி, வீரவநல்லூர், பத்தமடை ஆகிய தலங்களில் அம்பாள் உற்சவம்.

அக்டோபர் 31, புதன்

கார்த்திகை விரதம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் ரிஷப சேவை. தென்காசி அம்பாள் பவனி.

நவம்பர் 1, வியாழன்

கௌரீ விரதம். சங்கரன்கோவில் அம்பாள் பவனி. பத்தமடை அம்பாள் புறப்பாடு கண்டருளல்.

நவம்பர் 2, வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி. திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்திலும் மாலை ரிஷப வாகனத்திலும் பவனி.