Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?


  


அக்டோபர் 20, சனி

திருக்கோஷ்டியூர் எம்பெருமான் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம். அகோபிலமடம் ஸ்ரீமத் 11வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். சஷ்டி விரதம்.

அக்டோபர் 21, ஞாயிறு

உத்திரமாயூரம் வள்ளலார் சந்நதியில் சந்திரசேகரர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சந்நதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

அக்டோபர் 22, திங்கள்

உத்திரமாயூரம் வள்ளலார் சந்நதியில் சந்திரசேகரர் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தரிசனம். துர்க்காஷ்டமி.

அக்டோபர் 23, செவ்வாய்

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திரு அவதார மகா உற்சவத்தையொட்டி திருத்தேர் திரு விழா. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி உற்சவ ஆராட்டு விழா. திருவோண விரதம். மகாநவமி. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை.

அக்டோபர் 24, புதன்

திருக்கோஷ்டியூர் எம்பெருமான் ஊஞ்சலில் காட்சியருளல். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். தசரதலளித கெளரி விரதம். பழைய மகாபலிபுரம் சாலையில் நாவலூர் அருகே உள்ள தாழம்பூர் த்ரிசக்தியம்மன் கோயிலில் வித்யாரம்ப விழா. விஜயதசமி.

அக்டோபர் 25, வியாழன்

திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

அக்டோபர் 26, வெள்ளி

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். பக்ரீத் பண்டிகை.