Pages

தினம் தினம் கருடசேவை


திருச்சி-திருவாரூர் பாதையில் உள்ளது எண்கண். இக்கோயிலில் கருட வாகனத்தின் மீது அமர்ந்த பெருமாளை தரிசிக்கலாம். திருமாலின் திருமார்பை உதைத்த பாவம் தீர பிருகு முனிவர் தவம் செய்தபோது அங்கு வேட்டையாட வந்த சோழ மன்னனை பிருகு முனிவர் சபித்தார். அந்த சாபம் தீர கார்த்திகை பௌர்ணமியன்று காவிரியில் நீராடிய சோழமன்னன், இக்கோயிலுக்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டிக்கொள்ள பெருமாள் கருடாரூடராய் தரிசனமளித்து மன்னனின் சாபத்தைத் தீர்த்து, அவன் வேண்டியபடியே அங்கு நிலைகொண்டார்.