சென்னை-வேலூர்
வழியில் வேலூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள ரத்னகிரி குன்றின் மீது
பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பாலமுருகன் தங்க ரதத்தில்
வலம்வர மகாமண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தங்க
ரதம் உள்ள ஆலயங்களில் தங்கத்தேர் இழுக்க வேண்டும் என்றால் முன்பதிவு செய்து
சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு கிருத்திகை
தினத்தன்றும் மாலையில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பக்தர்கள் வடம் பிடித்து
இந்தத் தங்கத் தேரை இழுக்கலாம்.



