நவம்பர் 17, சனி
சதுர்த்தி விரதம். சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபாலன் திருக்கோலமாய் வீதியுலா. குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
நவம்பர் 18, ஞாயிறு
சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம். வள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகுப் பலகை தரிசனம். சகல சுப்பிரமணியர் ஆலயங்களிலும் கந்த சஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா.
நவம்பர் 19, திங்கள்
திருவோணவிரதம். சஷ்டி விரதம்.
நவம்பர் 20, செவ்வாய்
சிக்கல் சிங்காரவேலவர் வெள்ளி ரதத்தில் பவனி. திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தலங்களில் உற்சவம் ஆரம்பம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பவனி.
நவம்பர் 21, புதன்
சிக்கல் சிங்காரவேலவர் காட்சியருளல். சுவாமிமலை முருகன் இடும்ப வாகனத்தில் வீதியுலா. வள்ளியூர் முருகன் ஏக சிம்மாசனத்தில் பவனி.
நவம்பர் 22, வியாழன்
சிக்கல் சிங்காரவேலவர் விடையாற்றி உற்சவம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் வீதியுலா.
நவம்பர் 23, வெள்ளி
திருவண்ணாமலை அருணாசல பெரியநாயகர் ரிஷப வாகனத்தில் காட்சியருளல். புட்டபர்த்தி சத்ய சாயிபாபா அவதார தினம்.



