சேலம்
-அன்னதானப்பட்டியில் பொங்கல் படையல், குகைவண்டி வேடிக்கை, செருப்படித்
திருவிழா என விதவிதமான ஆடி மாதத் திருவிழாக்களால் ஊரே களைகட்டும்.
வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம்,
முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர அவர் அதை பக்தர்கள் தலையில் நீவி
விடுவதே செருப்படித் திருவிழா.



