Pages

ராணுவ கட்டுப்பாட்டில் ஒரு கணபதி கோயில்


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் கிழக்கே கோட்டையில் உள்ள பழவங்காடி கணபதி கோயிலுக்கு உள்ள ஒரு சிறப்பு அம்சம் இந்தியா வில் வேறு எந்த கோயிலுக்கும் கிடையாது. அதா வது, இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1795ம் ஆண்டு ராணுவத்தின் தலைமையகம் திருவனந்தபுரத்திற்கு மற்றப்பட்டது. இந்த சமயத் தில் திருவிதாங்கூர் ராணுவத்தில் இருந்த ராணுவ வீரர் தன்னிடமிருந்த கணபதி விக்கிர கத்தையும் கையோடு திருவனந்தபுரத் திற்கு கொண்டு வந்தார்.இந்த விக்கிரகம் பழவங்காடியில் பிரதி ஷ்டை செய்யப்பட்டு சிறிய கோயில் கட்டப்பட்டது.

இதன் பின்னர் திருவிதாங்கூர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட் டின் கீழ் வந்தது. ராணுவ தளபதிகள் ஒரு முறையாவது இக்கோயிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தேங்காய் உடைப்பது தான் இக்கோயி லின் இன்னொரு சிறப்பம்சம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்தபடியாக பழவங்காடி கணபதி கோயிலில் தான் அதிக அளவில் தேங்காய் உடைக்கப்படுகி றது. இந்தக் கோயிலில் தேங்காய் உடைத் தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகமாகும். பத்மநாபசுவாமி கோயிலுக்கு மிக அருகில் இக்கோயில் உள்ளது.