அக்டோபர் 13, சனி
திருமயம் ஆண்டாள் புறப்பாடு. திருக்குற்றாலம், பாபநாசம், திருவம்பல் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி. சனிப் பிரதோஷம். மாத சிவராத்திரி.
அக்டோபர் 14, ஞாயிறு
திருக்குற்றாலம் சிவபெருமான் திருவீதியுலா. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் உற்சவம் ஆரம்பம். போதாயன அமாவாசை. கேதார விரத சமாப்தம்.
அக்டோபர் 15, திங்கள்
ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா. திருக்குற்றாலம், பாபநாசம், திருவம்பல் தலங்களில் சிவபெருமான் பவனி. மகாளய அமாவாசை
தர்ப்பணம்.
அக்டோபர் 16, செவ்வாய்
மதுரை மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியருளல். சிருங்கேரி சாரதாம்பாள் புறப்பாடு. நவராத்திரி பூஜை ஆரம்பம்.
அக்டோபர் 17, புதன்
உத்தரமாயூரம் வள்ளலார் சந்நதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு.
அக்டோபர் 18, வியாழன்
ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் பவனி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நதியில் சந்திரசேகரர் புறப்பாடு. சதுர்த்தி விரதம்.
அக்டோபர் 19, வெள்ளி
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் ரத உற்சவம்.



