கலங்கரை
விளக்கத்தைப் போல் செயல்பட ஒரு கோவிலுக்கு 'ஏழு நிலை கோபுரம்' கட்டினார்
ஜகுல் நாயக்கர் எனும் குறுநில மன்னர். இது கோவிலுக்குக் கோவிலாகவும்
இருந்தது. டச்சுக்காரர்களின் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகவும் ஆயிற்று.
அப்படி இருவகைகளுக்கும் பயன்பட்ட கோவில்தான் 'நாகப்பட்டினம்' ஸ்ரீ
சௌந்தரராஜப் பெருமாள் கோவில்.



