Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?


ஆகஸ்ட் 18, சனி

சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் உற்சவ சேவை.

ஆகஸ்ட் 19, ஞாயிறு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆவணிப் பெருவிழா தொடக்கம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

ஆகஸ்ட் 20, திங்கள்

விருதுநகர் சுவாமி சொக்கநாதர் உற்சவம். மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளல். ரம்ஜான் பண்டிகை.

ஆகஸ்ட் 21, செவ்வாய்

மதுரை சொக்கநாதர் மாணிக்கம் விற்றருளிய லீலை. விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதியுலா. சதுர்த்தி விரதம்.

ஆகஸ்ட் 22, புதன்

மதுரை சுந்தரேஸ்வரர் தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல்.

ஆகஸ்ட் 23, வியாழன்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. சுவாமிமலை முருகர் தங்கக் கவசம் வைரவேல் தரிசனம். சஷ்டி விரதம்.

ஆகஸ்ட் 24, வெள்ளி

மதுரை சிவபெருமான் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. படைவீடு அன்னை ரேணுகாம்பாள் பவனி. விருதுநகர் சுவாமி குதிரை வாகனம், அம்பாள் சிம்ம வாகனத்தில் பவனி.