Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?


ஆகஸ்ட் 4, சனி

சங்கரன் கோவில் கோமதியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல். குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை.

ஆகஸ்ட் 5, ஞாயிறு

மகா சங்கடஹர சதுர்த்தி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருவீதியுலா. சங்கரன் கோவில் கோமதியம்மன் ஊஞ்சலில்
காட்சியருளல்.

ஆகஸ்ட் 6, திங்கள்

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருவீதியுலா. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 7, செவ்வாய்

திருவரங்கம் சுவாமி நம்மாழ்வார் புறப்பாடு. சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா.

ஆகஸ்ட் 8, புதன்

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா. திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
ஆகஸ்ட் 9, வியாழன் - திருத்தணி முருகன் பரணி உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. கிருஷ்ண ஜெயந்தி.

ஆகஸ்ட் 10, வெள்ளி

கார்த்திகை விரதம். சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரத உற்சவம். இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா.