Pages

ஆடித் திருவிழா : அம்மன் அலங்காரம்


 

திருநின்றவூர் நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து, மஞ்சளாடை தரித்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து அம்பிகையை
வழிபடுகின்றனர்.

கோவை ஈச்சனாரியில் உள்ள முப்பெருந்தேவியர் ஆலயத்தில் ஆடி முதல் மூன்று வாரங்கள் தேவியரை பூக்களாலும் நான்காவது வாரம் காய்கறிகளாலும்
ஐந்தாவது வாரம் பழ வகைகளாலும் அலங்கரிப்பர்.

செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள கமலக்கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பர். அன்று மாலை அம்மன் புற்றுக் கோயிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைவாள். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் பூங்கரகத்தின் முன் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

ஆடிப்பௌர்ணமியன்று திருநெல்வேலி காந்திமதியம்மனின் ஆடித்தபசு காட்சியை தரிசிக்கலாம்.