Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?



செப்டம்பர் 22, சனி

திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். இரவு மகர கண்டி லட்சுமிகார அலங்காரங்களுடன் கருட உற்சவம். தல்லாக்குளம் பிரசன்ன வேங்கடேசர் பவனி.

செப்டம்பர் 23, ஞாயிறு

திருப்பதி ஏழுமலையப்பன் வசந்த உற்சவம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் யானை வாகனத்தில் வீதியுலா.

செப்டம்பர் 24, திங்கள்

திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூர்ய பிரபையிலும் இரவு சந்திரப் பிரபையிலும் பவனி. கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் திருக்கல்யாணம்.

செப்டம்பர் 25, செவ்வாய்

திருப்பதி ஏழுமலையப்பன் ரத உற்சவம். தல்லாக்குளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை. திருவோண விரதம்.

செப்டம்பர் 26, புதன்

ஸ்ரீவில்லிபுத்தூர் எம்பெருமான் ரத உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் தீர்த்தவாரி. வாமன ஜெயந்தி. சர்வ
ஏகாதசி.

செப்டம்பர் 27, வியாழன்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. பிரதோஷம். உத்திர கௌரி விரதம்.

செப்டம்பர் 28, வெள்ளி

கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வீதியுலா. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி. அனந்த விரதம்.